×

இது தான் பர்ஸ்ட்.. அன்ட் லாஸ்ட் வார்னிங்: மிரட்டிய சசிகலா ஆதரவாளர் மண்டி போட்ட அதிமுக எம்எல்ஏ; சோற்றை திங்குறதா இருந்தா இனிமே வாயே திறக்க கூடாது; அப்படி மீறி பேசினா நடக்குறதே வேற… மேடையே ஏற மாட்ட

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள இரவிபுதூரில் அதிமுக பொதுக்கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘ஜெயலலிதா இறப்புக்கு காரணம் சசிகலா தான். தனக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் பல லட்ச கோடி ஊழல் செய்து, வழக்கில் சிக்க வைத்தார். சிகிச்சைக்காக அம்மாவை வெளிநாடு கொண்டு செல்ல முடிவு செய்த போது, அவருக்கு பாஸ்போர்ட் இல்லாததால் கொண்டு செல்ல முடியாத வகையில் செய்தவர் சசிகலா.

ஒரு வேலைக்காரியாக அம்மா கூட சேர்ந்தவர், இப்போது கட்சி ஆரம்பிக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு சொத்து இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு அம்மாவுக்கு செய்த துரோகம் வெட்ட வெளிச்சமாகி கொண்டு இருக்கிறது. இந்த இயக்கத்துக்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை’’ என்றார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு, சசிகலா ஆதரவாளர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ உரையாடலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா ஆதரவாளர்: அண்ணே தளவாய் அண்ணே… நீங்க நேத்து அந்த மேடையில சின்னம்மாவை பத்தி அப்படி பேசுனது தப்புண்ணே.
தளவாய்சுந்தரம்: ஏப்பா… முனுசாமி பேசிருக்காரு, சீனிவாசன் பேசிருக்காரு. நீ என்னை மட்டும் ஏன்பா கேட்க.
சசிகலா ஆதரவாளர்: அவனுங்க எல்லாம் நாய் மாதிரி கிடந்து பதவி வாங்கிட்டு போனவனுங்க. நீங்க பேசலாமா? நீங்க யாரால வளர்ந்தீங்க.
தளவாய்சுந்தரம்: நான் பேச மாட்டேன்னு சொல்லிட்டேன்ல… அப்புறம் என்ன? என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?
சசிகலா ஆதரவாளர்: நம்பிக்கை இருக்கப்போய்த்தான் அண்ணன் கிட்ட பேசுறேன். ஆனா ஒரு வார்த்தை நீங்க தப்பா பேசுனதுனாலதான் இவ்வளவு தூரம் பேசுறேன். தளவாய் அண்ணே, இப்ப சொல்றேன்… இனிமே நீங்க சின்னம்மாவைப் பத்தியோ, அந்த குடும்பத்தைப் பத்தியோ பேசுனா நடக்குறதே வேற. ஜாக்கிரதை, இதான் உங்களுக்கு பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்.
தளவாய்சுந்தரம்: ரைட்… ரைட்… வச்சுக்கோ. இனிமே இப்படி நடக்காது.
சசிகலா ஆதரவாளர்: எப்போ மறுப்பு தெரிவிப்பீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல.
தளவாய்சுந்தரம்: நான் மேடையிலேயே மறுப்பு தெரிவிச்சு சொல்லிட்டேனேப்பா.
சசிகலா ஆதரவாளர்: இல்லண்ணே, மேடையில என்ன சொன்னீங்க? சின்னம்மா இல்லைன்னா நீங்க ஏது? இந்த குடும்பம் இல்லைன்னா நீங்க யாரு? சொல்லுங்க.
தளவாய்சுந்தரம்: இல்லப்பா… நான் நேத்து பேசுனதை அவங்க அப்படியே திருத்தி போட்டுட்டாங்க.
சசிகலா ஆதரவாளர்: என்னத்த திருத்தி போட்டாங்க? நீங்க என்ன பேசுனீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். நீங்க ஒரு உண்மையான ஆளா இருந்தா, சோற்றை திங்குறதா இருந்தா, இதையெல்லாம் பேசக்கூடாது.
தளவாய்சுந்தரம்: சரிப்பா… சரிப்பா… இனிமே பேச மாட்டேன்.
சசிகலா ஆதரவாளர்: தளவாய் அண்ணே, மீண்டும் உங்களுக்கு சொல்றேன். இதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். மனசார நீங்க தப்புன்னு ஒத்துக்கிட்டு பேசுங்க. இனிமே சின்னம்மா குடும்பத்தைப் பத்தி தப்பா பேசினா எந்த மேடையிலும் உங்களை ஏறவிட மாட்டோம்.
தளவாய்சுந்தரம்: ரைட்… தேங்க்யூ… இனிமே அப்படி நடக்காது.
சசிகலா ஆதரவாளர்: நாங்க எல்லாம் கவுரவத்துக்காக வாழ்றவங்க. நீங்க மனசாட்சிப்படி சொல்லுங்க, யாரால பதவிக்கு வந்தீங்க? யாரால இந்த இடத்துல இருக்கீங்க?
தளவாய்சுந்தரம்: ஏப்பா… நீ என்னையும் அண்ணனா பாரு, நான் உன்னை தம்பியா பார்க்கிறேன். இனிமே இந்த மாதிரி வராது.
சசிகலா ஆதரவாளர்: தளவாய் அண்ணே, ஓபிஎஸ்-ஐ சின்னம்மா தான் பதவிக்கு கொண்டு வந்தாங்க. அவரு சின்னம்மாவுக்கு செஞ்ச துரோகத்துக்கு தான், அனுபவிச்சிட்டு இருக்காரு. நீங்களும் சீக்கிரமே அனுபவிச்சிடாதீங்க. இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை.
தளவாய்சுந்தரம்: சரிப்பா… 100 சதவீதம் இனிமே பேச மாட்டேன். நான் வேணும்னா போன் போட்டு உங்ககிட்ட பேசுறேன். யாரு என்ன பேசுறாங்கனு சொல்றேன்.
சசிகலா ஆதரவாளர்: நீங்க பேசணும் அண்ணே. அப்பத்தான் நீங்க உண்மையான ஆளுன்னு அர்த்தம். சவுத்ல (தெற்கில்) சின்னம்மா இல்லாம எவனாவது பதவிக்கு வந்து இருப்பீங்களா? சொல்லுங்க பாப்போம்.
தளவாய்சுந்தரம்: ரைட்… ரைட்… விடுப்பா.
சசிகலா ஆதரவாளர்: தளவாய் அண்ணே, ஒரு தம்பியா பேசுறேன். இதெல்லாம் முறையல்ல. என்னை பத்தி உங்களுக்குத் தெரியும், நான் எந்த லெவலுக்கும் போவேன்.
தளவாய்சுந்தரம்: சரிப்பா… தம்பியா ஏத்துக்குறேன். இனிமே இப்படி வராது.
சசிகலா ஆதரவாளர்: பாத்துக்கோங்க அண்ணே… இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இவ்வாறு இவர்களின் உடையாடல் வைரலாகி வருகிறது.

* அதிமுக கதை கதம்…கதம்…எடப்பாடியால் எழுந்திரிக்க முடியாது: டிடிவி ஒரு ஊசி போன போண்டா; போட்டு தாக்கும் பெங்களூரு புகழேந்தி
அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாத்மா காந்தியில் தொடங்கி பேரறிஞர் அண்ணா, காமராஜரை போல பொதுவுடமைக்காக பாடுபட்டு உயிரிழந்த மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு, சென்னையில் தமிழக அரசு சிலை நிறுவ வேண்டும். எனக்கு ஒரே பொது எதிரி எடப்பாடி தான். அவரை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். புதிதாக கட்சி தொடங்கியுள்ள சசிகலாவை இட்லி, சாம்பார் என பேசும் டிடிவி.தினகரன் ஒரு ஊசிப்போன போண்டா.

குற்றவாளியான டிடிவியுடன், பிரதமர் மோடி ஒரே மேடையில் இருப்பது கேலிக்கூத்தானது. எப்போது இருந்தாலும் எடப்பாடிக்கு ஆபத்து தான். அதிமுகவின் கதை முடிந்து விட்டது. இனிமேல் எடப்பாடியால் எழுந்திருக்க முடியாது. எடப்பாடி களத்திலேயே கிடையாது. ஆர்எஸ்எஸ், பாஜ கொள்கைகளுக்கு பெரியார் எதிரானவர் என்பதால், பொதுக்கூட்டத்தில் இருந்த அவரது படத்தை அகற்றியுள்ளனர். எடப்பாடி, தன்னுடைய கொள்கை என்னவென கூறினால், அரசியலில் இருந்தே விலக தயாராக உள்ளேன்.

வரும் சட்டமன்ற தேர்தலில், 3வது இடம் யாருக்கு என்பதில் சீமானுக்கும், எடப்பாடிக்கும் தான் போட்டியே. எடப்பாடியால் 1, 2 சீட் கூட ஜெயிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். அவரது சாப்டர் குளோஸ் ஆகிவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களுடன் எடப்பாடியை ஒருபோதும் ஒப்பிடக் கூடாது. தவெகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், அஸ்திவாரத்தை இன்னும் சரியாக அமைக்கவில்லை. தொண்டர்களுடன் ஆலோசனை செய்து, எங்களது ஆதரவு யாருக்கு என்பதை ஒரு வாரத்தில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
செல்வப்பெருந்தகை (காங். மாநில தலைவர்) சென்னை
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன்(பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம்(சி.பி.எம். மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ. மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்)- சென்னை சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி (பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்) சென்னை
சீமான் (நாதக ஒருங்கிணைப்பாளர்) சென்னை
டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பனையூர்

Tags : AIADMK MLA ,Sasikala ,AIADMK ,Raviputhur ,Anjugramam ,Kanyakumari district ,Former minister ,Kumari ,East ,district ,Thalavaisundaram MLA ,Jayalalithaa ,
× RELATED நாம ஒன்னும் விஐபி கிடையாது; பிரசார...