×

சின்னம்மை நோய் தடுப்பு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பொது சுகாதாரத் துறை

 

சென்னை: சின்னம்மை நோய் என்பது வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் காரணமாக எளிதில் பரவும் தொற்று நோய். லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மையுடன் சின்னம்மை தொற்று தொடங்குகிறது. வரிசெல்லா ஜோஸ்டர் (Varicella Zoster) என்ற வைரஸ் கிருமியால் பரவக்கூடிய தொற்று நோய், சின்னம்மை. இது குழந்தைகளையும் முதியவர்களையும்தான் அதிகமாகத் தாக்கும். ஐந்து முதல் பத்து நாள்கள் வரை உடலில் தங்கியிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு மனிதரிடமிருந்து தும்மல், சளி, இருமல் வழியே மற்றொருவருக்குப் பரவும். உடலுக்குள் புகுந்த மூன்று வாரத்தில் வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ், தன்னுடை பாதிப்பைக் காட்ட ஆரம்பிக்கும். அதிகபட்சமாக, 102 டிகிரி பாரன்ஹீட் வரை காய்ச்சல் அடிக்கும். தொண்டை, நுரையீரலில், தோலில் புண்களை ஏற்படுத்தும். இது நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்புகள் உண்டு. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம்.

சின்னம்மை நோயை தடுக்க நீர் சத்து மிகுந்த ஆகாரங்கள், சத்தான உணவு சாப்பிட வேண்டும். நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முழுமையாக குணமடைந்த பிறகே அனுப்பவும். பொது இடங்களுக்கு செல்வத்தை தவிர்த்தல். இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல். பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும்வரை (சுமார் 7-10 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.

Tags : Department of Public Health ,Chennai ,
× RELATED செங்குன்றம் அருகே தனியார் பெயின்ட் மூலப்பொருட்கள் கிடங்கில் தீ விபத்து!!