* மகா விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில்தான்.
* மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபவர்.
* மாசி மாதத்தன்றுதான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காக தோன்றினாள்.
* சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில்தான்.
* மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.
* குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.
* அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான்.
* மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்றுதான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.
* பிரம்ம ஹத்தி போன்ற பெரும்பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.
* உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றை தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
* அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில்தான்.
* காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.
* மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை வீடாக இருந்தாலும், அவ்வீட்டில் அதிகம் நாள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப் பிரவேகம் நடத்தலாம்.
* இம்மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
* மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர், ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக்கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
* மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர், மாசி மக புராணம் படிக்கலாம் அல்லது கேட்கலாம். அதுவும் புண்ணியமே.
* மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோயில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக் கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
* மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்த பின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
* மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
* மாசி சுக்லபட்ச பஞ்சமியில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவர்.
நாகலட்சுமி
