ஓசூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்; தீவிர கண்காணிப்பு

ஓசூர், பிப்.9: ஓசூர் வனப்பகுதியில், யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனிக்காலம் முடிய உள்ளதால் வனத்துறையினர் இப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி, சானமாவு, கெலமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கர்நாடக வனப்பகுதியையொட்டி 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன. கடந்த மாதங்களில் மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையால், வனப்பகுதி யாவும் மரங்கள், செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. மேலும் அனைத்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நீர்வளம் நன்றாக உள்ளதால், விவசாய பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. இந்நிலையில், பனிக்காலம் முடியும் தருவாயில் உள்ளதால், வனப்பகுதியில் வறண்ட வானிலை நில வாய்ப்பு உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் முகாமிட்டுள்ள யானைகள் அதிகாலையில் கிராமங்களில் நுழைய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து யானைகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வன அலுவலர் வனத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும், வனப்பகுதியில் வன விலங்குகளின் நலனை காக்க தேவையற்ற இடங்களில் மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். யானைகள் மீது யாரும் தாக்குதல் நடத்தக்கூடாது. எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் முதல் வாரத்தில் வனப்பகுதியில் உள்ள யானைகள், காட்டெருது,மான், முயல் உள்ளிட்ட விலங்குகளை கணக்கெடுக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: