×

கஞ்சா கடத்தி வந்த 3 பெண் உள்பட 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையை சேர்ந்த கஞ்சா வியாபாரி கீதா. இவர் சட்டத்துக்கு விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தனிப்படை போலீசார் கீதாவின் செல்போன் என்னை கண்காணித்து வந்தனர். அப்போது கீதா செல்போனில் இருந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒருவரிடம் பேசியுள்ளார். அங்கிருந்து அந்த போன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தனிப்படை போலீசார், கீதாவை பின் தொடர்ந்து சென்றனர்.

அப்போது கீதா மற்றும் இரண்டு பெண்களுடன் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். தண்டையார்பேட்டை ஐஓசி பேருந்து நிலையம் அருகே மறைவான இடத்தில் சென்றபோது ஆட்டோவில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது. சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். தொடர்ந்து கண்டைனரை திறந்து சோதனை செய்தபோது அதில் 20 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் லாரி டிரைவர் மற்றும் 3 பெண்களை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த கீதா(45), பத்மா (42) தீபா (45), ஆட்டோ டிரைவர் நிதீஷ் குமார் (30), தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர் ஜான் (35) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் ஆட்டோவில் சென்றது வாடகை ஆட்டோ என்பதால் டிரைவரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Dandaiyarpettai ,Geeta ,Korukuppettai ,Deputy Commissioner ,Vannarpet ,
× RELATED பெற்றோரை கொன்று மகன் தற்கொலை...