×

மனைவியை பிளேடால் சரமாரி வெட்டிய கணவன் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா (25). இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தினேஷ் (எ) தடியா தினேஷ் என்பவருடன் திருமணம் ஆனது. கடந்த ஜனவரி மாதம் வியாசர்பாடியை சேர்ந்த சதாம் என்பவரை கொலை முயற்சி செய்த வழக்கில் புழல் சிறையில் தினேஷ் அடைக்கப்பட்டார். அவரது மனைவி ரம்யா தினேஷை ஜாமினில் எடுக்க குள்ள பிரசாத் என்பவர் மூலம் முயற்சி செய்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தினேஷ் ஜாமினில் வெளியே வந்து நேற்று காலை 6 மணிக்கு தனது மனைவி ரம்யா வீட்டிற்கு சென்று அவரிடம் என்னை ஜாமினில் வெளியே எடுக்க ஏன் குள்ளபிரசாத்தை தொடர்பு கொண்டு அவர் மூலமாக என்னை ஜாமினில் வெளியே எடுத்தாய், அவருக்கும் உனக்கும் கள்ளத்தொடர்பு இருக்கிறதா எனக்கேட்டு தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரமாரியாக தனது மனைவி ரம்யா முகத்தில் கிழித்துள்ளார். ரம்யா கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தினேஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Perambur ,Ramya ,Vyasarpadi B.Kalyanapuram ,Chennai ,Dinesh (a) Thadiya Dinesh ,Sadham ,Vyasarpadi… ,
× RELATED பெற்றோரை கொன்று மகன் தற்கொலை...