×

ஆட்டோ மோதி பெண் பலி

பாலக்காடு, ஏப்.12: பாலக்காட்டை அடுத்த எடத்தராவைச் சேர்ந்த சுரேந்திரனின் மனைவி லதா (51). இவருக்கு ஸ்ரீராக் என்ற மகன், ஸ்ரீகுட்டி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் பால் வாங்குவதற்காக லதா சாலையின் குறுக்கே கடந்துள்ளார். அப்போது பத்திரிப்பாலா பகுதியிலிருந்து பாலக்காடு நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோ அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில், படுகாயமடைந்த லதாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு அதே ஆட்டோவில் கல்லேக்காட்டிலுள்ள கூட்டுறவு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல், சிகிச்சைக்காக பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் லதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags : Palakkad ,Latha ,Surendran ,Edatthara ,Srirak ,Srikutty ,
× RELATED தேயிலை, காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்