×

பறக்கும் படையிடம் ரூ.1.75 லட்சம் சிக்கியது

திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின் போது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்தால் உடனே பறிமுதல் செய்கிறார்கள். அதன்படி, நேற்று திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவன் தியேட்டர் பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் லுன்சிங் என்பவரிடம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது. இதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Tags : Tiruppur North ,
× RELATED தேயிலை, காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்