×

மூத்தோர் நடைபயிற்சி விழிப்புணர்வு

பாலக்காடு, ஏப்.12: பாலக்காடு மாவட்டம் நடை பயணியர் குழுவின் சார்பில் மூத்தோர் நடைபயிற்சி விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில், ஒரே வண்ண உடையில் 50க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மூலம் சுகர், பிரஷர், உடம்புவலி, கால் முட்டி வலி, போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில், நடைபயிற்சி குழுவின் தலைவர் ஆனந்தநாராயணன், செயலாளர் ராஜாகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Citizens Walking Awareness ,Palakkad ,Palakkad District Walking Group ,
× RELATED தேயிலை, காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்