×

ஜெயங்கொண்டத்தில் இலவச அழகு கலை பயிற்சி

ஜெயங்கொண்டம், பிப். 28: ஜெயங்கொண்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் இலவச அழகு கலை பயிற்சியளிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில திட்ட குழு அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து 3 நாட்கள்ள் இலவச அழகு கலை பயிற்சியளிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வளமிகு வட்டாரங்கள் என்பதன் அடிப்படையில் நடைபெற்றது.

இதில் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 32 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி பயிற்சியை துவக்கிவைத்தார். பயனாளிகளுக்கு தமிழரசி. பயிற்சிணை பயிற்றுவித்தார். பயிற்சியின் இறுதி நாளான நேற்று அரியலூர் மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து பாஸ்கர், பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்களை வழங்கினார். இப்ப பயிற்சியினை அரியலூர் மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் ஏற்பாடு செய்திருந்தார்.

 

Tags : Jayankondam ,Entrepreneurship Development and Innovation Institute ,Tamil Nadu State Planning Commission Ariyalur District Planning Office ,Entrepreneurship Development and Innovation Institute… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்