பாவூர்சத்திரம், பிப்.28: பாவூர்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 36ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் அழகு முத்து மாரியம்மனுக்கு 500 கிலோ எடை கொண்ட கேந்தி, மல்லி, தாமரை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும் நடந்தது. ஒரு டன் பனங்கிழங்கு, சோளம், நெல்லி, சீனிக்கிழங்கு, வாழைப்பழங்கள், தர்ப்பூசணி, வாழை, முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள், 3 ஆயிரம் வடை, 3 ஆயிரம் லட்டு போன்றவற்றை அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. மதியம் அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவன்பாண்டியன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.
பாவூர்சத்திரம் அருகே அழகு முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
- அழகுமுத்து மாரியம்மன் கோயில்
- பவுர்சத்ரம்
- வருடாந்திர குரு பூஜை விழா
- அருணப்பேரி அழுகமுத்து மாரியம்மன் கோவில்
