- பெருநகர பகுதி
- சென்னை
- ஜி. கே. பார்தசரதி
- எம் காலனி பிரகாசம் தெரு
- அம்பத்தூர்
- வட்டம்
- சுரபத்
- பிரிட்டானியா
சென்னை, பிப்.28: சென்னை ஜி.கே.எம் காலனி பிரகாசம் தெருவை சேர்ந்த பார்த்தசாரதி (65) என்பவர், கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி காவல் துறையில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: அம்பத்தூர் வட்டம், சூரப்பட்டு பிரிட்டானியா நகரில் உள்ள எனக்கு சொந்தமான 2400 சதுரடி காலி மனையை, ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, பக்தவச்சலம் என்பவருக்கு 2021ம் ஆண்டில் பொது அதிகாரம் கொடுத்தும், பின்னர் பக்தவச்சலம், நடராஜன் என்பவருக்கு 1200 சதுரடியும், ராஜேஷ் என்பவருக்கு 1200 சதுரடி விற்பனை செய்துள்ளதாகவும், பின்னர் நடராஜனும், ராஜேஷ் சேர்ந்து அனிதா என்பவருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, அனிதா மேற்படி சொத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1,27,11,341 கடன் பெற்று எனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி சொத்தை அபகரிக்கும் நோக்கில் ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆவடி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், காவல் உதவி ஆணையர் கோவிந்த் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், 5.6.2025ம் ஆண்டு திருவான்மியூர் சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்த பக்தவச்சலம் (54) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே முக்கிய குற்றவாளியான அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் பிரசன்னா என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நடராஜன், ராஜேஷ் மற்றும் அனிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.
