×

பேனர், இங்க் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ

அம்பத்தூர், ஏப்.14:அம்பத்தூர் அடுத்து பட்டரவாக்கத்தில ஸ்பிகோ பெயின்ட் லிங்க் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பணியில் இருந்த போது, கம்பெனிக்குள் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த இருவரும், உடனே தீ அணைப்பானை வைத்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் உள்ளே இருந்த ரசாயனங்கள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ கட்டுக்குள் வராததால் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் வந்த அம்பத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

Tags : Banner, Inc. ,Ambattur ,Spigo Paint Link Private Limited ,
× RELATED உரிமம் புதுப்பிக்காமல் துப்பாக்கி வைத்திருந்த சிஐஎஸ்எப் வீரர் கைது