×

மார்ச் 2,3ல் வீடுதேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் கலெக்டர் தகவல்

அரியலூர், பிப்.27: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதார்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே சென்று பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில் குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Ariyalur ,District ,Collector ,Rathinasamy ,Chief Minister ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்