×

வேலூர் மற்றும் சைதாப்பேட்டையில் ரூ.149 கோடியில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: வேலூர் மற்றும் சைதாப்பேட்டையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.149 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் ரூ.99.76 கோடி செலவில் 2,28,984 சதுர அடி பரப்பளவில் அரசு பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி “சி” வகை குடியிருப்பு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Vellore ,Saidapet ,Chennai ,M.K. Stalin ,Public Works Department ,Dadandar Nagar ,
× RELATED 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை...