×

இமாச்சலுக்கு சுற்றுலா சென்ற ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் பேரன் மரணம்

சிம்லா: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன். இவர் சிபுசோரனை அமலாக்கத்துறை கைது செய்த போது முதல்வர் பதவியை ஏற்றார். இவரது 19 வயது பேரன் வீர் சோரன். இமாச்சல் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சோலாங் மற்றும் ஹம்தா பாஸ் ஆகியவற்றைப் பார்வையிட்ட பிறகு தனது நண்பர்களுடன் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியை அடைந்தார். உயரமான மலை பகுதிகளுக்கு சென்று திரும்பிய வீர் திடீரென கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். உடனே அவருக்கு மருந்து வழங்கப்பட்டது. இருப்பினும், அவர் சுயநினைவை இழந்து படுக்கையில் இருந்து விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வீர் சோரனின் வாயிலிருந்து நுரை வந்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. தகவல் அறிந்து மணாலி சென்ற சம்பாய் சோரனிடம், அவரது பேரன் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Jharkhand ,CM ,Himachal ,Shimla ,Former ,Sambhai Soren ,Chibu Soren ,Enforcement Directorate ,Veer Soren ,Solang ,Hamda Bose ,
× RELATED வங்கி மோசடி வழக்கு அனில் அம்பானியின்...