×

செல்போன் திருட்டு ஆசாமி கைது

வேலூர், பிப்.26: ரயில் பயணியிடம் செல்போன் திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். காட்பாடி குமரப்பா நகர் அக்ராவரத்தை சேர்ந்தவர் மகேஷ்(31). இவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் காட்பாடியில் இருந்து அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பொதுஜன பெட்டியில் ஏறினார். வண்டி சிறிது தூரம் புறப்பட்டு சென்ற நிலையில் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மகேஷ் அரக்கோணம் சென்று உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு திரும்பி காட்பாடி ரயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீஸ் எஸ்ஐ பத்மராஜா, இன்ஸ்பெக்டர் சித்ரா அறிவுறுத்தலின் பேரில் போலீசாருடன் காட்பாடி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ரயில் நிலைய முதலாவது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தலுபுலா பிரகாஷ் நகரை சேர்ந்த சின்னகுள்ளையப்பா முருகி(52)யை பிடித்து விசாரித்த போது அவர் மகேஷிடம் செல்போன் திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து சின்னகுள்ளையப்பா மீது வழக்குப்பதிவு செய்து ேகார்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Vellore ,Mahesh ,Kumarappa Nagar, Agravaram, Katpadi ,Bangalore ,Chennai ,Katpadi… ,
× RELATED மின் ஊழியருக்கு கத்திக்குத்து 2...