×

கோத்தகிரி-குன்னூர் நெடுஞ்சாலையில் காட்டு மாடுகள் உலா; வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் நெடுஞ்சாலையில் காட்டு மாடுகள் உலா வருகின்றன. வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் காட்டு மாடுகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக காட்டு மாடுகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக பசுந்தீவனம் கிடைக்காததால், உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் காட்டு யானைகள் உலா வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து குன்னூர், ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கன்னிமாரியம்மன் கோயில் அருகே காட்டு மாடுகள் கூட்டம் எவ்வித அச்சமும் இன்றி சாலையில் உலா வந்துள்ளது. இதனால், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இதேபோன்ற காட்டு மாடுகள் சாலையில் உலா வருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிலை அறிந்து வனத்துறையினர் சாலையில் உலா வரும் காட்டு மாடுகளை வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Kotagiri-Coonoor highway ,Kotagiri ,Coonoor ,Nilgiris ,
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...