- கந்தர்வகோட்டை
- தாலுக் அலுவலகம்
- வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு
- தாலுக்கா
- அலுவலகம்
- புதுக்கோட்டை
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை…
*வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகம்
கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைபை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து வருவாய் அலுவலர்கள் கூறும்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைக வழங்கிடவும், சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிபளுவை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் உடன் வழங்கிட வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உடன் வழங்கிடவும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களின் நியமனத்தில் பட்டப்படிப்பு வேண்டும் என 9அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரையிலும், நிலஅளவர் முதல் ஆய்வாளர் வரையிலும், அலுவலக உதவியாளர் முதல் வட்டாச்சியர் வரையிலும் அனைவரும் பங்கேற்றனர்.
வருவாய்துறை அரசு அலுவலர்கள் போராட்டத்தால் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
