×

நெற்பயிரில் மஞ்சள் தண்டு துளைப்பான் கட்டுப்பாடு இனக்கவர்ச்சி பொறி குறித்து விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், பிப்.25: அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் திருமானூர் கிராமத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு கல்லூரி மாணவிகள் சார்பில் நெற்பயிரில் தாக்கம் ஏற்படுத்தும் மஞ்சள் தண்டு துளைப்பான் பூச்சியை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பெரோமோன் வலை (இனக் கவர்ச்சி பொறி) பயன்படுத்தும் முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இனக்கவர்ச்சி பொறி மூலம் ஆண் பூச்சிகளை ஈர்த்து பிடிப்பதால் பூச்சியின் இனப்பெருக்கம் குறைந்து, நெற்பயிர் சேதம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், ரசாயன பூச்சிக்கொல்லி பயன்பாடு குறைவதால் விவசாயிகளின் செலவு குறைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படும் என மாணவிகள் தெரிவித்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருமானூர் ஒன்றிய மாணவிகள் ஞானாம்பிகை ,தில்ஷா, தனலெட்சுமி, தனுஷியா, தேஜஸ்வினி, பவ்மிதா, கௌசல்யா, ஹரிணி, இளவரசி,ஆகியோரால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் இந்த தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருப்பதாக பாராட்டி, நெற்பயிர் பாதுகாப்பில் பயன்படுத்த உறுதியளித்தனர்.

 

Tags : Jayankondam ,Father Rover Agriculture and Rural Development College ,Thirumanur village ,Thirumanur ,Ariyalur ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்