ஹூப்ளி: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று, கர்நாடகா அணிக்கு எதிராக, ஜம்மு காஷ்மீர் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் குவித்தது. ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, ஹூப்ளி நகரில் ஜம்மு காஷ்மீர்-கர்நாடகா இடையே நேற்று துவங்கியது. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து களமிறங்கிய ஜம்மு காஷ்மீர் அணியின் துவக்க வீரர் காம்ரான் இக்பால் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் யாவர் ஹசன் கான், சுபம் புந்திர் இணை சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த யாவர், 88 ரன்னில் ஆட்டமிழந்தார். பின் வந்த கேப்டன் பரஸ் தோக்ரா 9 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த அப்துல் சமத், சுமம் புந்திருடன் இணை சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஜம்மு காஷ்மீர் 2 விக். இழப்புக்கு 284 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. சுபம் புந்திர் 117, அப்துல் சமத் 52 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
