×

திருவிழா சீசன் தொடங்கியதால் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் விற்பனை களைகட்டியது

*ரூ.50 லட்சம் வர்த்தகம்

கே.வி.குப்பம் : திருவிழா சீசன் தொடங்கியுள்ளதால் கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் வியாபாரம் அமோகமாக நடந்து. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. ஆடுகளின் வரத்தும் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கிராமங்களில் திருவிழாக்கள் நெருங்கி வருவதால் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தைகளை போலவே, நேற்றும் விற்பனை களைகட்டியது. இதனால் நேற்று ரூ.50 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் கணிசமாக உயரும் என்றும், இதேபோன்று வருகின்ற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : K.V.Kuppam ,K.V.Kuppam. ,Vellore ,
× RELATED தரமான சாகுபடி செய்வதன் மூலம் தேயிலை கொள்முதல் விலையை உயர்த்த நடவடிக்கை