×

பொக்காபுரம் திருவிழாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்புப் பகுதி மற்றும் பழமையான யானை வழித்தடத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் நடைபெறும் இத்திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் தீ தடுப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மதுபான பாட்டில்களை காடு பகுதியில் வீசி செல்லக் கூடாது மற்றும் புகைபிடித்தலை தவிர்த்தல் ஆகியவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரால் இணைந்து நடத்தப்பட்டது. பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் பருத்தி துணி பேனர்கள் கோவில் சுற்று வட்டாரத்தில் அமைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தாலும், திருவிழா காலங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மதுபான பாட்டில்கள் காணப்படுகின்றன. மேலும், கோவில் சுற்று வட்டார கடைகளில் புகைபிடித்தல் நடைபெறுவது கவனிக்கப்பட்டது.

வரும் ஆண்டுகளில் திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாடு, மதுபானம் அருந்துதல் மற்றும் புகைபிடித்தலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இயற்கை வளமிக்க இந்த யானை வழித்தடப் பகுதியை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டது.

Tags : Bokhapuram Festival ,Ooty ,Bokkapuram ,Mariyamman ,Temple ,Neelgiri District ,Mudumalai Tigers Archive ,
× RELATED கே.வி.குப்பம், குடியாத்தத்தில் சமுதாய...