×

கோபியில் தேறுவாரா பார்க்கலாம்…

கோபிக்காரர் இலை கட்சியில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தொடர்ந்தவர். ஜெயலலிதா முதல்வரானபோதும் அவரது அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்தவர். குறிப்பாக அவரது சுற்றுப்பயணங்களுக்கு ரூட் போட்டு கொடுத்தவர். இதனால் எந்தத் தொகுதியில் எப்போது பிரசாரம் செய்ய வேண்டும் என தமிழகத்தின் நாடித்துடிப்பு முழுவதையும் நன்கு அறிந்தவர். 1977ல் முதன்முதலாக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்அதன்பின்னர் தொடர்ந்து கோபிச்செட்டிபாளையத்தில் போட்டியிட்டு வென்றார்.

அவர் சந்தித்த 10 சட்டமன்ற தேர்தல்களில் 1996ல் மட்டுமே திமுகவிடம் தோல்வி அடைந்துள்ளார். 9 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். தற்போது அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள கோபிக்காரர் முதல்வராக விஜய் வருவார் என கூறி வருகிறார். ஒரு கட்சியில் இருப்பவர் அந்த கட்சித் தலைவரைப்பற்றி பெருமை பேசத்தான் செய்வார். இல்லையெனில் அங்கும் இடம் காலியாகி விடும். தற்போதைய பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனும் முன்பு இலை கட்சியில் கோபிக்காரருடன் பயணித்தவர்தான். 2001ல் முதல் தேர்தலை சந்தித்து எம்எல்ஏவாகி கோபிக்காரருடன் அமைச்சரவையில் இருந்தார்.

தற்போது இவர் பாஜகவிலும், கோபிக்காரர் நடிகரின் கட்சியிலும் பயணிக்கும் நிலையில், கோபிக்காரர் குறித்து நயினாரின் ரியாக்சன் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தோம். அதற்கு பதில் அளித்த நயினார், வரும் தேர்தலில் முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்கிறார், முதலில் அவர் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அதன்பிறகு தெரியும் என்றாரே பார்க்கலாம்.

Tags : Kobe ,Kopikar ,MGR ,Jayalalitha ,Tamil Nadu government ,
× RELATED அமமுகவை உடைக்க சசிகலா திட்டம்