*பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு
ஊட்டி : ஊட்டியில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கூறி 10 பேரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊட்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஊட்டியை சேர்ந்த லோகநாயகி உட்பட 10 பேர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் அனைவரும் ஊட்டியில் வசித்து வருகிறோம். சாலினி, அருண், திலக் மற்றும் மகாலட்சுமி ஆகிய நான்கு பேர் எங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர்.
மேலும், தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக கூறி எங்களிடம் இருந்து தலா ரூ.1 லட்சம் மற்றும் 2 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் வரை பெற்றுக் கொண்டனர்.ஆனால், எங்களுக்கு எவ்வித தொழில் வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரவில்லை.அவர்கள் எங்கள் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். அவர்கள் தொடர்பு கொண்டு பணம் கேட்டால், எங்களை தகாத வார்த்தைகள் கூறி கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.
மேலும், காவல் நிலையங்களில் அவர்கள் மீது புகார் அளித்து எவ்வித பயனும் ஏற்படவில்லை. எனவே, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
