- இந்திய இராணுவம்
- சென்னை
- திருவள்ளூர்
- கடலூர்
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- ராணிப்பேட்டை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
சென்னை: இந்திய ராணுவத்தில் அக்னி வீரர் பணிக்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், திருப்பத்தூர், தி.மலை , ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தித்தின் கீழ் பொதுப் பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், ஆயுதப்பிரிவு, பெண் ராணுவ காவல், பார்மா ஆகிய பல்வேறு பிரிவுகளின் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
ராணுவத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அக்னிபாத் திட்டம் என்பது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு செயல் திறன் அடிப்படையில் வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள்.
அக்னிவீர் (ஜெனரல் டூட்டி) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்து இருப்பது கட்டாயம். 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். டிரைவர் பணிகளுக்கு எல்.எம்.வி லைசன்ஸ் வைத்து இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அக்னிவீர் (தொழில் நுட்பம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அறிவியல் பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். இயற்பியல், கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கொண்ட பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.
இவர்களுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.. 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு ரூ.10 லட்சம் வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ்நியமிக்கப்படும் வீரர்கள் 6 மாதம் பயிற்சி பெறுவார்கள். மீதமுள்ள 3.5 ஆண்டுகள் பணி புரிவார்கள்.
அக்னிபாத் திட்டத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான அக்னி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியானது. அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பிக்க ஏப்.1 கடைசி நாளாகும். ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
