×

தர்மபுரி ஒருங்கிணைந்த புளி வர்த்தக மையம் இன்று திறப்பு

தர்மபுரி, பிப்.21:தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று(21ம் தேதி) தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மகளிர் விடியல் பயணம் செய்யும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, 12 புதிய நகர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார். பின்னர், தெருக்கூத்து கலைஞர்களின் கலை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டிகளை வழங்குகிறார். காலை 10.15 மணிக்கு அதியன் கூட்டரங்கில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்குகிறார். முற்பகல் 11.15 மணிக்கு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த புளி வர்த்தக மையத்தை திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சதீஸ் தலைமை வகிக்கிறார். ஆ.மணி எம்.பி., மாவட்ட புளி வணிகர்கள் நலச்சங்க தலைவர் பாஸ்கர், செயலாளர் டிஎன்வி வினோபாஜ்ராஜ், துணை செயலாளர் கணபதி மற்றும் பகுதி தலைவர்கள் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். நண்பகல் 11.45 மணிக்கு செம்மாண்டகுப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் விநியோகத்தை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.

Tags : Dharmapuri Integrated Tamarind Trading Centre ,Dharmapuri ,Tamil ,Nadu ,Agriculture and ,Farmers Welfare Minister ,M.R.K. Panneerselvam ,Dharmapuri district ,
× RELATED காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா