×

காவேரிப்பட்டணத்தில் சமுதாய வளைகாப்பு விழா

காவேரிப்பட்டணம், பிப்.20: காவேரிப்பட்டணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சிகள் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நித்தியா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி, மாவட்ட ஓட்டுனர் அணி தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி துணை தலைவர் மாலினி மாதையன் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர் முருகம்மாள் சுமதி, சாந்தி ,சாரதா, அமுதவல்லி, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Kauverypattanam ,Social Welfare and Women's Rights Department ,Mayor ,Amsaveni Senthilkumar… ,
× RELATED சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடக்கம்