கிருஷ்ணகிரி, பிப்.20: கிருஷ்ணகிரி அடுத்த தாசரிப்பள்ளியைச் சேர்ந்தவர் துரைசாமி(64). இவர் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, அவர் பணியில் இருந்த போது, விளையாட்டு அரங்கில் உள்ள பார்க்கில் சுமார் 25 வயது வாலிபர் காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த துரைசாமி, இங்கு இருக்கக்கூடாது, வெளியேறுங்கள் என கூறியுள்ளார். ஆனால், அந்த வாலிபர் போக முடியாது என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர். துரைசாமியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த துரைசாமி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதுபற்றி நேற்று தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, துரைசாமியை தாக்கிய வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
