×

சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடக்கம்

கிருஷ்ணகிரி, பிப்.19: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருப்பலியுடன் தொடங்கியது. இதனை பங்குத்தந்தை அருள்ராஜ் முன்னின்று நடத்தினார். இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தவக்காலமான 40 நாட்களும் கிறிஸ்தவர்கள் அசைவ உணவு தவிர்ப்பார்கள். இதே போல், சுண்டம்பட்டி, எலத்தகிரி, புஷ்பகிரி, கந்திகுப்பம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று தவக்காலத்தையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mercury ,Krishnagiri ,Krishnagiri Pure Fatima Mother Church ,Christians ,Pure Fatima Mother Church ,Ash Wednesday ,Parakutanda ,Arulraj ,
× RELATED வீடு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் சேதம்