×

சான்றோர்குப்பத்தில் மாடுவிடும் விழா இலக்ைக நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள்

ஆம்பூர் : ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தில் நேற்று நடந்த எருதுவிடும் திருவிழாவில் இலக்கை நோக்கி 150க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தையொட்டி எருதுவிடும் திருவிழா நடப்பது வழக்கம்.

இதேபோல் நேற்று நடந்த எருதுவிடும் திருவிழாவில் ஆம்பூர் தாசில்தார் ரேவதி கலந்துகொண்டு பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவித்தார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்க எருதுவிடும் விழா துவங்கியது.

இதில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 174 காளைகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரம் என பல பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் அதிவேகத்தில் தெறிக்கவிட்டபடி ஓடிச்சென்றதில் இளைஞர்கள் 2 பேர் காயமடைந்தனர். இந்த விழாவையொட்டி 45 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags : -riding ,Channorguppam ,Ambur ,riding ,Tirupattur district ,Masi ,
× RELATED உலகமே கண்டிராத வரலாறு காணாத பல...