சென்னை: உலகமே கண்டிராத வரலாறு காணாத பல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார் என்று முதலமைச்சருக்கு செல்வப்பெருந்தகை புகழாரம் சூட்டியுள்ளார். ஒன்றிய அரசு நெருக்கடி கொடுத்தாலும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று அறைகூவலுடன் முதல்வர் செயல்படுகிறார். நாட்டை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராடி வருகிறார்.
எவ்வளவு எதிரிகள் வந்தாலும் தலை நிமிர்ந்து தமிழ்நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கிறார் முதலமைச்சர். ஒன்றிய அரசின் எந்த நெருக்கடியை பொறுத்தாலும் நிதி நெருக்கடியை பொருத்துக் கொள்ள முடியாது. தலைநிமிர்ந்து தமிழ்நாட்டை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர். தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளார். நெருக்கடிகள் வந்தபோது தமிழ்நாடு மக்களை தலைகுனிய விடமாட்டோன் என தலை நிமிரச் செய்தவர் முதல்வர் என் கூறினார்.
