- வேதாரண்யம் திறந்தவெளி பள்ளி
- வேதாரண்யம்
- பிராந்திய
- கல்வி
- மைய ஒருங்கிணைப்பாளர்
- பூபேஷ் குப்தா
- பிராந்திய கல்வி மையம்
- ஒருங்கிணைப்பாளர்
- நாகை, திருவாரூர் திறந்தநிலைப்பள்ளி மற்றும் திறன் கல்வி வாரியம்
வேதாரண்யம்,பிப்.19: வேதாரண்யம் திறந்த நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது என்று மண்டல கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் திறந்த நிலைப்பள்ளி மற்றும் திறன்கல்வி வாரியத்தின் மண்டலக் கல்விமைய ஒருங்கிணைப்பாளர் புபேஷ்குப்தா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பள்ளி கல்வியை எட்ட இயலாதவர்களையும் கல்விபயில செய்வதே எமது நோக்கம் என்ற அடிப்படையில் பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், படிக்க விரும்புவோர் மற்றும் அரசு பணியில் உள்ளோர் பதவி உயர்வு பெறவும், கல்லூரி மற்றும் தொலைநிலைக்கல்வி சேர்க்கையளிக்கவும், டி.என்.பி.எஸ்.சி / யு.பி.எஸ்.சி / நீட் / ஜே.இ.இ தேர்வுகள் எழுதிடவும் வீட்டில் இருந்தபடியே படிப்பு தொடரலாம்.
இப்பள்ளியில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மத்திய, மாநிலப் பள்ளிக்கல்வி சான்றுக்கு இணையானது. எனவே அறிய வாய்ப்பை பயன்படுத்தி சேர்க்கையளிக்க விரும்புவோர் திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நாகை கல்வி மைய எண்களில், 9578570470, 9345439171, 7598326576 தொடர்பு கொண்டு மேலும் தகவல்கள் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
