×

போதை ஒழிப்பு விழிப்புணர்வு

தேனி, பிப்.21: தேனி அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டு விழா நடந்தது. தேனி அருகே, அம்பாசமுத்திரத்தில் உள்ள விஜயலட்சுமி பப்ளிக் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டு விழா நடந்தது. அம்பாசமுத்திரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், கண்டமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்லத்துரை சிறப்புரையாற்றி விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பள்ளித் தாளாளர் நீலமேகம் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பின்னர் பள்ளி முதல்வர் லாசர் பள்ளிக் கொடியை ஏற்றினார். இதில் போலீஸ் நண்பர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

 

 

Tags : Abuse Awareness ,Theni ,abuse ,Vijayalakshmi ,Public ,School ,Ambasamudram ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...