×

பிளஸ் 2 தேர்வுக்கு 99 மையங்கள் தயார்

விருதுநகர், பிப்.21: விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்காக 99 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. 22 ஆயிரத்து 123 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். தமிழ்நாட்டில் மார்ச் 2 முதல் 26 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 218 பள்ளிகளில் இருந்து 9,855 மாணவர்கள், 11 ஆயிரத்து 715 மாணவிகள், தனி தேர்வர்கள் 553 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 123 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்கென 99 தேர்வு மையங்கள் தயார்நிலையில் உள்ளன. 99 தேர்வு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர் என மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Virudhunagar ,Virudhunagar district ,Tamil Nadu ,Virudhunagar… ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...