திருவனந்தபுரம்: கேரளாவில் மது பார்கள் காலை 11 முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் மது பார்களின் விற்பனை நேரத்தை 2 மணிநேரம் உயர்த்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மது விற்பனை செய்யலாம். 5 நட்சத்திர பார்களில் அதிகாலை 3 மணி வரை மது சப்ளை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் அதிகமாக கட்டணம் செலுத்தினால் பார்களை அதிகாலை 3 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
