×

இந்து மத தம்பதிகள் 3 குழந்தைகளை பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

லக்னோ: லக்னோவில் நடந்த கூட்டம் ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ‘‘நாட்டில் இந்து மக்கள் தொகை குறைந்து வருவது கவலை அளிக்கிறது. இந்துக்களை ஒன்றிணைத்து அதிகாரம் வழங்க வேண்டும். இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை, ஆனால் மக்களிடம் விழிப்புணர்வு அவசியமாகும். ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து, அவர்களை, நாடு கடத்த வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படக்கூடாது. சராசரியாக, மூன்றுக்கும் குறைவான குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதிகள் கொண்ட சமூகங்கள் எதிர்காலத்தில் மறைந்து போகக்கூடும் என்ற அறிவியல் கருத்துகள் உள்ளது. எனவே இந்து குடும்பங்கள் குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெறுவது குறித்து யோசிக்க வேண்டும். புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

Tags : RSS ,Mohan Bhagwat ,Lucknow ,Hindus ,
× RELATED டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை,...