×

2025-26ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: 2025-26ம் கல்வி ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: 2025-26ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் கடந்த ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது.

தற்போது தேர்வெழுதிய மாணவர்களின் மதிப்பெண்கள் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளி வகை மற்றும் இனம் ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு கூட நுழைவுச்சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24ம் தேதிக்குள் தெரிவிக்க வேணடும். இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : National Revenue Service ,Directorate of Government Examinations ,Chennai ,
× RELATED 62 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள்...