- ரிஷி
- மரிசி
- அங்கிராஸ்
- ஆத்ரி
- புலஸ்திர்
- புலஹர்
- க்ரது
- வசிஷ்தர்
- மன்சா
- ஆத்ரி மகரிஷி
- ஸ்ரீஅனுசுயதேவி பிரம்மா
- மான்ஸ்டர்ஸ் போர்
அத்ரி மகரிஷி, ஸ்ரீஅனுசுயாதேவி பிரம்மாவின் மானஸ புத்திரர்களாக பிறந்தவர்கள் மரீசி, ஆங்கீரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர் ஆகியவர்கள். இவர்களை சப்தரிஷிகள் என்பர்.அத்ரி மகரிஷி சூரிய சந்திரனுக்கு ஒப்பானவராக திகழ்ந்தார். ஒருமுறை தேவ அசுரர் போர் நிகழ்ந்தபோது அசுரர் களின் அம்பு மழையால் உலகம் இருண்டது. அப்போது தேவர்களின் வேண்டுதலை ஏற்று அத்ரி மகரிஷி சூரியனாக ஒளிர்ந்து தேவர்கள் போரில் வெற்றிபெற உதவினார் வைத்திய சாஸ்திரத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் இவரின் பங்களிப்பு சிறப்பானதாகும்.அனுசுயா, கர்தமர்-தேவஹூதியின் பெண் ஆவார். கற்பில் சிறந்தவர். இந்த அம்மையாரின் கற்புத் திறனை நாரதர் மூலம் அறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி முதலான முப்பெரும் தேவியரும் அனுசுயா மீது பொறாமை கொண்டனர். அவள் கற்பை சோதிக்க தங்கள் கணவர்களை அனுப்பினர்.
அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சன்னியாசிகள் போல் அத்ரி மகரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தனர் அவர்களை முறைப்படி வரவேற்று அனுசுயா தேவி உணவு பரிமாற ஆயத்தமாகும் போது ஆடை எதுவும் இன்றி வந்து உணவிட்டால்தான் உண்போம் என்று மூன்று பேரும் நிபந்தனை விதித்தனர்.தன் கணவனை எண்ணி வணங்கி அனுசுயா வந்திருப்பவர்கள் யாரென்று புரிந்து கொண்டாள். கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தைகளாக்கி உணவு பரிமாறினாள். குழந்தைகளை தன்னிடமே வைத்துக் கொண்டாள்.
கணவர்களை காணாமல் தவித்த மூன்று தேவியரும் உண்மையறிந்து அனுசுயாவிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அவளும் மும்மூர்த்திகளையும் பழைய நிலைக்கு கொண்டு வந்தாள்.உனக்கு என்ன வரம் வேண்டும் என்று அவர்கள் கேட்க, உங்கள் மூவரின் அம்சத்தோடும் ஒரு மகன் வேண்டும் என்றாள். அதன்படி அக்ரி மகரிஷி- ஸ்ரீ அனுசுயா தேவியின் புதல்வராக அவதரித்தவர், தத்தாத்ரேயர்.அத்ரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை மலை தொடரில் உள்ள திரி கூட மலைப்பகுதியாகும் எனவே, இந்தப் பகுதிக்கு அத்ரி மலை என்றும் பெயருண்டு வேதபுராண இதிகாசங்கள் அனைத்திலும் இந்த தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். ஸ்ரீஅத்ரி மகரிஷி- ஸ்ரீஅனுசுயா தேவி அருளிய ஆண்கள், பெண்கள் செய்ய வேண்டிய நட்சத்திர தான தர்மங்கள்.
அஸ்வினி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
மஞ்சள் தானம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்
மஞ்சள் அரைத்து ஏதேனும் ஒரு கோயிலுக்கு அளித்தல்.
பரணி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
நெல்லிப் பொடி.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்
கணபதி கோயிலில் அரைத்த சந்தனம் அளித்தல்.
கார்த்திகை
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
வற்றல் குழம்பு.
பெண்கள் செய்ய வேண்டியது தானம்.
முருகன் கோயிலில் பழங்கள் அளித்தல்.
ரோகிணி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
தயிர்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
அம்மன் கோயிலில் பால் தானம் அளித்தல்.
மிருகசீரிஷம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
பருப்பு.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை அளித்தல்
திருவாதிரை
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
களி, கூழ்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
சிவன் கோயிலுக்கு குங்குமம் அளித்தல்.
புனர்பூசம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
பால் சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
கிருஷ்ணன் கோயிலுக்கு திருவிளக்கு. மூங்கில்கள் அளித்தல்.
பூசம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
சாம்பார் சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
அரச மர நாகம் இருக்கும் கோயிலில் பால் அளித்தல்.
ஆயில்யம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
மோர், வத்தல் குழம்பு.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
வன்னி விநாயகர் கோயிலில் மோதகம் அளித்தல்.
மகம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
கீரை.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
ஆலமர விநாயகர் கோயிலில் கொழுக்கட்டை அளித்தல்.
பூரம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
பலாப்பழ இனிப்பு சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் அளித்தல்.
உத்திரம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
புளியோதரை.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
வைத்தீஸ்வரன் கோயிலில் கலவை சாதம் அளித்தல்.
ஹஸ்தம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
தேங்காய் சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
மூலவருக்கு மல்லிகை பூ தானம் (ஏதாவது ஒரு கோயிலில்).
சித்திரை
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
சர்க்கரைப் பொங்கல்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
சிவன் கோயிலில் வில்வமாலை அளித்தல்.
சுவாதி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
பருப்புப் பொடி சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
அம்மன் கோயிலில் முல்லை மாலை அளித்தல்.
விசாகம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
கருவேப்பிலை பொடி சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
கணபதி கோயிலில் விளாம்பழம், வெல்லம் சேர்த்து அளித்தல்.
அனுஷம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
வெண் பொங்கல்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
சிவன் கோயிலில் மகிழம்பூ அளித்தல்.
கேட்டை.
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
மாங்காய் சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
சிவன் கோயிலில் தாமரை பூ அளித்தல்.
மூலம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
அதிரசம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
பெருமாள் கோயிலில் தோசை அளித்தல்
.
பூராடம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
போளி
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
காலபைரவர் கோயிலில் உருளைக்கிழங்கு சாதம் அளித்தல்.
உத்திராடம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
கடலை மாவு.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்
எல்லை தேவதைக்கு இளநீர் அளித்தல்.
திருவோணம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
அரிசி மாவு, கேசரி.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
எருக்கம்பூ மாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல்.
அவிட்டம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
அவல்
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
வன்னிமாலை பிள்ளையார் கோயிலில் அளித்தல்.
சதயம்
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
சேலை.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
ஹயக்ரீவர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் அளித்தல்.
பூரட்டாதி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
புட்டு.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
முருகன் கோயிலில் தேன் தினை மாவு அளித்தல்.
உத்திரட்டாதி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
உளுந்து பட்சணம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
கோயிலில் பசுவிற்கு கீரை, பழம் அளித்தல்.
ரேவதி
ஆண்கள் செய்ய வேண்டிய தானம்.
கொத்தமல்லி துவையல் சாதம்.
பெண்கள் செய்ய வேண்டிய தானம்.
அம்மன் கோயிலில் அடி பிரதட்சணம் செய்து இனிப்பு அளித்தல்.
ஆண் – பெண் இருபாலரும் மேற்காணும் அவரவர் நட்சத்திரங்களுக்குரிய தான தர்மங்களை செய்து ஸ்ரீ அத்ரி மகரிஷி ஸ்ரீ அனுசுயா தேவி தம்பதியரின் அருளாசியோடு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறோம்.
