×

ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் திட்டம்..? மத்திய கிழக்கு நாடுகளுக்கு 50 போர் விமானங்களை அனுப்பியுள்ளது அமெரிக்கா

தெஹ்ரான்: இரண்டு வாரங்களில் ஒரு புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தெஹ்ரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு அருகில் தனது வான் மற்றும் கடற்படையை பலத்தை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் F-35s, F-22s மற்றும் F-16s உட்பட 50க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் மேற்கு ஆசியாவிற்கு சென்றுள்ளன.

நேற்று(18-02-2026) ஜெனீவாவில் அமெரிக்காவும் – ஈரானும் “அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டனர். இருப்பினும், இன்னும் விவாதிக்க விவரங்கள் அதிகம் உள்ளன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத தொடக்கத்தில் மஸ்கட்டில் நடைபெற்ற முதல் சுற்றை விட நேற்று நடந்த விவாதங்கள் மிகவும் “ஆக்கபூர்வமானவை” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார் . ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சாத்தியமான ஒப்பந்தத்திற்கான “வழிகாட்டும் கொள்கைகளில்” இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

இந்த நிலையில் அதன் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக ஈரான் மீது அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் மாத போராட்டங்கள் மீதான வன்முறை ஒடுக்குமுறைக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அருகே கனரக இராணுவப் படைகளை டிரம்ப் நிர்வாகம் குவித்துள்ளது.

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா ஏற்கனவே கடந்த மாத இறுதியில் தனது விமானம் தாங்கி கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலுக்கு அனுப்பியுள்ளது. பின்னர், பிப்ரவரி முதல் வாரத்தில், ஒரு டஜன் F-15 போர் விமானங்கள், ஒரு MQ-9 ரீப்பர் போர் ட்ரோன் மற்றும் பல A-10C தண்டர்போல்ட் II தரைவழித் தாக்குதல் விமானங்களும் ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி விமானத் தளத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.

Tags : Trump ,Iran ,United States ,Middle East ,TEHRAN ,US military ,
× RELATED ஜெனீவாவில் 2வது நாளாக ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை