×

போதையில் வாலிபர் சாவு

சிவகாசி, பிப்.18: சிவகாசி அருகே போதையில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார். சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (எ) மாரிச்சாமி(27). இவர் சம்பவத்தன்று அதிகளவில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் அருகே நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வாலிபர் மாரிமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டார்.  இந்த சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Marimuthu (A) Marichamy ,M.Duraichamipuram ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்