×

கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர், பிப். 18: விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிப்.20 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் என கலெக்டர் சுகபுத்ரா நேற்று தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா வெளியிட்ட அறிக்கை வருமாறு: விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிப்.20 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன், விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்க வேண்டும். விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags : Collector's Office ,Virudhunagar ,New Collector's Office Partnership ,Collector ,Sukputra ,
× RELATED போதையில் வாலிபர் சாவு