×

மாற்றுத்திறனாளிகள் கலெக்டரிடம் மனு

தேனி, பிப். 18: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு 10க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வந்து கோரிக்கை மனு அளித்தினர்.

மனுவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்மார்ட் கைபேசி வழங்க வேண்டும். பார்வையற்ற மாற்றுத்திறனாளி நிர்மலா என்பவருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட தோராய பட்டாமனையை கணினியில் பதிவு செய்து புதிய பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூறப்பட்டிருந்தன.

 

Tags : Theni ,Theni Collector ,Theni District Collector ,Collector ,Ranjeet Singh ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்