×

குண்டாசில் 2 பேர் கைது

தேனி, பிப். 18: கம்பம் அருகே கருநாக்கமுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அஜய்(26). கம்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு செல்போனில் அஜய் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரரான சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் (எ)பசும்பொன் ஆகியோர் சேர்ந்து அஜயை கடந்த மாதம் கொலை செய்தனர்.

இவ்வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்விருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் எஸ்.பி சினேகாபிரியா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இவரது பரிந்துரையை ஏற்று, இரண்டு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

 

Tags : Gundas ,Theni ,Ajay ,Karunakkamuthanpatti ,Kambam ,Santosh ,Karthikeyan (A) Pasumpon… ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் பிப்.20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்