×

கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை, பிப். 18: பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை வழங்கக் கோரி மதுரையில் அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி செல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் ஏயூடி – மூட்டா சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு மூட்டா தலைவர் பெரியசாமிராஜா தலைமை வகித்தார்.

துணை தலைவர் உமா மகேஸ்வரி, பொதுச்செயலாளர் செந்தாமரைகண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல பொறுப்பாளர்கள் ரமேஷ்ராஜ், வில்சன் பாஸ்கர், பிரபாகரன் உட்பட 150க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். இதன்படி நேற்று முனதினம் தொடங்கிய இவர்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Madurai ,Joint Director of ,Education ,Zonal College ,Sellur Main Road… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்