×

டெல்லி -சென்னை ஜிடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

நாக்பூர்: புதுடெல்லி-சென்னை ஜிடி எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற பிறகு நேற்று காலை புறப்பட்டது. காலை சுமார் 11.09மணியளவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி பெட்டியில் இருந்து புகை வருவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ரயில் சிந்தி- துல்ஜாபூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெட்டி உடனடியாக ரயிலில் இருந்து அகற்றப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்து தீயை அணைத்தனர். ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார். விரிவான விசாரணைக்கு பின் தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவரும். பாதிக்கப்பட்ட பெட்டி கழற்றிவிடப்பட்டு மற்ற பெட்டிகளுடன் சிறிது நேரத்தில் ரயில் தனது பயணத்தை மீண்டும் தொடங்கியது.

Tags : Delhi ,Nagpur ,New Delhi ,Nagpur railway ,Maharashtra ,
× RELATED இந்தியாவுடன் கடற்பயிற்சியில் ஈடுபட்ட...