×

தமிழக அரசின் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று காலை தாக்கல்: தேர்தலை முன்னிட்டு புதிய அறிவிப்புகள் வெளியாகிறது

சென்னை: தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்​ஜெட் சட்​டப்​பேர​வை​யில் இன்று காலை 9.30 மணிக்கு தாக்​கல் செய்​யப்​படு​கிறது. தேர்தலை முன்னிட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்த ஆண்டு முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேர​வையை விட்டு வெளி​யேறி​னார். தொடர்ந்து ஆளுநர் உரை​யின் தமிழாக்​கத்தை பேர​வைத் தலை​வர் அப்​பாவு வாசித்​தார். உரையை ஆளுநர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்​னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜனவரி 22ம் தேதி தொடங்​கியது. முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 24ம் தேதி பதில் அளித்​தார். இதையடுத்​து, மறு​தேதி குறிப்​பி​டா​மல் பேரவை ஒத்தி வைக்​கப்​பட்​டது.
தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற உள்​ள​தால், தமிழக பட்​ஜெட் தாக்​கல் குறித்த கேள்வி​கள் எழுந்த நிலை​யில், கடந்த 8ம் தேதி சட்​டப்​பேரவை தலை​வர் அப்​பாவு கூறும்போது, தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் வரும் 17ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்​கு, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் உள்ள சட்​டப்​பேரவை மண்​டபத்​தில் கூடு​கிறது.

கூட்டம் தொடங்கியதும் 2026-27ம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதி அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தாக்​கல் செய்​கிறார். 20ம் தேதி 2026-27ம் ஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படும் என்று அறிவித்தார். நிதிநிலை வாசித்து முடிந்ததும் தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆகிறது. சட்​டப்​பேர​வையில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் வாசித்து முடிந்ததும், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்​வுக்​குழு கூட்டம் கூடி, பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்​யப்​படும்.

பேரவை நிகழ்​வு​கள் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகெங்​கிலும் இருந்து யார் வேண்​டு​மா​னாலும் இணை​யதளம் மூலம் பார்க்க முடி​யும். அமைச்சரின் பதில் உரைகள், மானியக் கோரிக்​கைகள், சிறப்பு தீர்​மானங்​கள் போன்​றவை நேரலை செய்​யப்​படு​கின்​றன. அமைச்சர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை முழு​மை​யாக நேரலை செய்​வது குறித்து அலு​வல் ஆய்​வுக்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்​யப்பட உள்ளது. தமிழக அரசின் பட்​ஜெட் ஆண்​டு​தோறும் பிப்​ர​வரி மாதம் தாக்​கல் செய்​வது வழக்​க​மாகும்.

கடந்த 2021ம் ஆண்டு ஆட்​சிக்கு வந்த திமுக பொது பட்ஜெட், வேளாண் பட்​ஜெட் ஆகியவை அடுத்தடுத்த நாட்​களில் தனித்தனியாக தாக்​கல் செய்யப்பட்டது. இது ஒரு நிதியாண்டு முழுமைக்கும் திட்டமிடப்பட்டு தாக்கல் செய்யப்படும். ஆனால் தற்போது, தமிழகத்​தில் சில மாதங்​களில் சட்டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ள​தால், குறுகிய கால செலவுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை மட்​டும் இன்று தாக்​கல் செய்ய முடி​யும். பின்​னர்​, வருகிற மே மாதம் புதிய ஆட்​சி அமைக்​கும்​ கட்​சி, 2026-27ம் ஆண்டுக்கான முழு பட்​ஜெட்​டை ​தாக்​கல்​ செய்​யும்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு வருகிற ஏப்ரல் மாதம் பொதுத்தேர்​தல் நடைபெற உள்ளதால், இன்று தமிழக அரசால் தாக்கல் செய்யப்படும் இடைக்​கால பட்​ஜெட்​டில் வழக்​க​மான நிதி ஒதுக்​கீடு​கள் மட்​டுமின்​றி, இளைஞர்கள் மற்றும் மக்களை கவரும் பல முக்​கிய அறி​விப்​பு​களும் இடம்​பெறு​வதற்கு வாய்ப்​புள்​ளது.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Legislative Assembly ,Tamil Nadu Legislature ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு பள்ளி...