×

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் பணியிடம் அதிகரிக்க வேண்டும்

சென்னை: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியிடங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு ஏற்றார் போல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களை உருவாக்கவில்லை. அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும்.அத்துடன் மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, தமிழக எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்குஊதியம் தரப்படுகிறது. எனவே ஊதியத்தை அரசு அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chennai ,Dr. ,S. Perumal ,legal campaign committee ,Tamil Nadu ,
× RELATED ரம்ஜானை முன்னிட்டு பள்ளி...