×

நஞ்சில்லா நெல் சாகுபடி விழிப்புணர்வு

மேலூர், பிப். 16: மேலூர் அருகே மேலவளவில் உள்ள விவசாயிகளுக்கு, நஞ்சில்லா நெல் சாகுபடி குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி ஆண்டு மாணவிகள், கிராமப்புற விவசாயப் பணி அனுபவ திட்டத்தின் ஒரு பகுதியாக மேலவளவு கிராமத்தில் தங்கியிருந்து விவசாயிகளுடன் இணைந்து களப்பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நஞ்சில்லா நெல் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் ரசாயனப் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், ஒருங்கிணைந்த சாகுபடியின் அவசியம், ஒரே கால அறுவடை, பூச்சி மேலாண்மை, அறுவடை எளிமை குறித்து மாணவிகள் எடுத்துரைத்தனர். மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையத்தினருடன் இணைந்து, மாணவிகள் நேரடியாக வயல்வெளிகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்தனர். அங்குள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களைப் பார்வையிட்டு, முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.

 

Tags : Nanjilla ,Melur ,Melavag ,Karaikudi Sethu Bhaskara Agricultural College ,Research Institute ,Rural Agriculture… ,
× RELATED திண்டுக்கல் அருகே கஞ்சா விற்றவர் கைது