×

ஜனநாயக பங்கேற்பை பலவீனமாக்கும் எஸ்ஐஆர்: ப.சிதம்பரம் கருத்து

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வெறும் நிர்வாக ரீதியானது மட்டுமல்ல. ஜனநாயகத்தின் நோக்கத்திற்கு தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி எப்படி சேவை செய்ய வேண்டும்?
எஸ்ஐஆர் என்பது அவசரமான நடவடிக்கை. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக மாற்றங்களை செய்தது. அது மக்களின் நம்பிக்கையை பெறும் வெளிப்படையான பயிற்சி அல்ல. ஜனநாயக பங்கேற்ப்பை பலவீனப்படுத்தும் பயிற்சி. மாநிலங்களில் தேர்தல் சமநிலையை மாற்றும் நடவடிக்கை. எஸ்ஐஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மேற்கு வங்க மாநில அரசால் எழுப்பப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றத்தால் மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க் கிறேன் என்றார்.

Tags : SIR ,Kolkata ,West Bengal ,Congress ,Senior President ,P. ,Chidambaram ,Electoral Commission ,
× RELATED நாடாளுமன்றத்துக்குள் நாய் கொண்டு...